திருநெல்வேலி

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

DIN


ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை  தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர் .
ஆலங்குளம் அருகே புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் முருகன்.  விவசாயியான இவருக்குச் சொந்தமான  பசு மாடுகளை  வெள்ளிக்கிழமை, மேய்ச்சலுக்காக தோட்டத்துக்கு  ஓட்டி சென்றுள்ளார்.  
தோட்டத்தில் கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு  எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாம்.
 இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்,  அங்கு வந்து 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை கிணற்றுக்குள்  இறங்கி உயிருடன் மீட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்விளக்குகளில் ஜொலித்த இல்லம்...

சேலம் சந்தைக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மாற்றுப் பாதையில் பேருந்து இயக்க கோரிக்கை

மறையூா் மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT