திருநெல்வேலி

அரசு அலுவலர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

DIN

அரசு அலுவலர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.  தனியார் தொண்டு நிறுவன இயக்குநர் மருத்துவர் விதுபாலா பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தார்.
பெண் அலுவலர்கள் பணிபுரியும் இடங்களில் ஆண் அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; ஆண் அலுவலர்கள் பணிபுரியும் இடங்களில் பெண் அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பெண்கள் பாலியல் தொந்தரவு பிரச்னைகளை கையாளும் வழிமுறைகள், புகார் அளிக்கும் நடைமுறைகள், தண்டனை விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ்குமார், பேச்சியம்மாள் (சத்துணவு) , விஜயகுமார் (முத்திரை) , உதவி ஆணையர் பழனிக்குமார் (கலால்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT