திருநெல்வேலி

அமமுக எம்.ஜி.ஆர். இளைஞரணிக் கூட்டம்

DIN

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி  ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்  பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் எஸ்.பி.ராஜா வரவேற்றார். மாநில அமைப்புச் செயலர் ஆர்.பி.ஆதித்தன், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் எஸ்.பரமசிவ ஐயப்பன், மாவட்டப் பொருளாளர் ஏ.பி.பால்கண்ணன், எம்.ஜி.ஆர். அணி மாநில நிர்வாகிகள் வி.கே.பி.சங்கர், ஜி.சின்னதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மாநில எம்.ஜி.ஆர்.அணிச் செயலர் கா.டேவிட் அண்ணாதுரை ஆலோசனை வழங்கிப் பேசினார். கூட்டத்தில், "ஜம்மு- காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் குழு அமைத்து இளைஞர்களை ஒன்றிணைப்பது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ராமுவெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் வி.தமிழ்செல்வி, நிர்வாகிகள் வி.பி.சரவணன், ஏ.முருகையா, டி.பாலகணேஷ், கே.போஸ்துரை,  எம்.எஸ்.மணிகண்டன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஜம்மு- காஷ்மீரில் மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சவலாப்பேரி சுப்பிரமணியன், கார்குடி சிவச்சந்திரன் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT