முகப்பு
திருநெல்வேலி

கடையநல்லூரில் சந்தைப் பகுதியில் வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

கடையநல்லூர் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்நகராட்சியில் தினசரி சந்தைப் பகுதியிலிருந்த

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:07 am IST
பகிர்:

கடையநல்லூர் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்நகராட்சியில் தினசரி சந்தைப் பகுதியிலிருந்த வழிப்பாதை கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
கடையநல்லூர் நகராட்சி தினசரி சந்தைப்பகுதியில் உள்ள வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் தலைமையில், வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆய்வாளர் மகேஷ், நகரமைப்பு ஆய்வாளர் சேக் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். 
இதில், வழிப்பாதை கடைகளை அகற்ற வேண்டும் என கூறப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் தாங்கள் வைத்திருந்த கடைகளை அகற்றினர். அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.