ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞர் சாவு
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
தென்காசி ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த பரமசிவன் மகன் இசக்கிராஜ் (27). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆலங்குளம் ராஜிவ்நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் மகேஸ்வரிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு, 6 மாத ஆண் குழந்தை உள்ளது. பெற்றோர் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக இசக்கிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வந்தாராம்.
அத்தியூத்து தனியார் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் இசக்கிராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இசக்கிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.