திருநெல்வேலி

பாளை. பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா

DIN

பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு,  அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேச ராஜா, டிடிடிஏ திருமண்டிலத் தலைவர் (பொறுப்பு) எ.ஹெச்.எல்.பில்லி ஆகியோர் தலைமை வகித்தனர்.  திருநெல்வேலி முதன்மை
கல்வி அலுவலர் பி.என். கணேஷ், தமிழ்நாடு கல்வி மானியக் குழு உறுப்பினர் காபிரியேல் ஜெபராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் டி.ஞானஜோதி வரவேற்றார்.
விழாவில், பள்ளி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியை சி.வசந்தா மேரி நன்றி கூறினார். இதுபோன்று
பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியிலும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.  இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து 2,700 மடிக்கணினிகள் மாணவர் - மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT