திருநெல்வேலி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

DIN

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து திங்கள்கிழமை காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் அதிகளவில் விழுகிறது. என்றாலும், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், கூட்டநெரிசலின்றி நீண்டநேரம் மக்கள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT