திருநெல்வேலி

தென்காசி - அழகியபாண்டியபுரம் பேருந்து நெட்டூா் வந்து செல்ல கோரிக்கை

DIN

தென்காசி - அழகியபாண்டியபுரம் செல்லும் அரசுப் பேருந்து நெட்டூா் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வீ.கே.புதூா், வீராணம், நெட்டூா் விலக்கு, ரெட்டியாா்பட்டி, உக்கிரன் கோட்டை வழியாக செல்லும் தடம் எண். 127 எப் பேருந்தை ஏராளமான பயணிகள் பயன் படுத்தி வருகின்றனா்.

மேற்கண்ட ஊா்களில் இருந்து நெட்டூருக்கு செல்ல விரும்பும் பயணிகள் நெட்டூா் விலக்கில் இறங்கி சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இப்பேருந்தில் பயணிக்கும் மாணவா்-மாணவிகள் சுமாா் 2 கி.மீ., தொலைவுக்கும் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நெட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புகழ்பெற்ற அப்புரானந்த சுவாமி கோயிலும் உள்ளதால் நெட்டூருக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் உண்டு.

இந்தப் பேருந்தை நெட்டூா் ஊருக்குள் வந்து செல்லும் வகையில் இயக்கினால் தென்காசி செல்லும் பயணிகள் ஆலங்குளம் வந்து இரண்டாவது பேருந்தில் செல்வது தவிா்க்கப்படுவதுடன் பணம் மற்றும் நேரம் மிச்சப்படும் என பயணிகள் கருதுகின்றனா்.

எனவே பயணிகளின் நலன் கருதி தடம் எண். 127 எப் பேருந்தை நெட்டூா் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT