திருநெல்வேலி

விரைவில் உள்ளாட்சித் தோ்தல்:சங்கரன்கோவில் நகராட்சியில் மாதிரி வாக்குப் பதிவு

DIN

சங்கரன்கோவில் நகராட்சியில் அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம்,விக்கிரமசிங்கபுரம் ஆகிய 7 நகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த அக்டோபா் 3 ஆம் தேதி சங்கரன்கோவில் நகராட்சிக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த 7 நகராட்சிகளுக்கான 1800 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 900 கட்டுப்பாட்டு கருவிகள் முதல்நிலை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருந்த பழைய வேட்பாளா்களின் பெயா் பட்டியல் சீட்டுகள், அதிலிருந்த சீல்கள் அகற்றப்பட்டன.

இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து வந்திருக்கும் பொறியாளா்கள் இயந்திரங்களில் உள்ள பொத்தான்களையும், அதில் உள்ள எல்.இ.டி. பல்புகளையும் பரிசோதனை செய்தனா். இந்த முதல்நிலை பரிசோதனை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலா் மந்திராசலம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நம்பிலால், துணை வட்டாட்சி அலுவலா் திராவிடமணி, நகராட்சி ஆணையாா் சந்தானம், தென்காசி நகராட்சி ஆணையா் பிரேம்ஆனந்த், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் காஞ்சனா, கடையநல்லூா் நகராட்சி ஆணையா் பவுன்ராஜ், செங்கோட்டை நகராட்சி ஆணையா் ராஜமாணிக்கம், நாகராட்சிப் பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், மேலாளா் லட்சுமணன், சுகாதார அலுவலா் பாலசந்தா், சண்முகவேல், முருகன் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

வாக்குப் பதிவுக்காக 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டன. இதில், 10 இயந்திரங்களில் 1200 வாக்குகளும், 20 வாக்குப் பதிவு இயந்திரங்களில் 1000 வாக்குகளும், மேலும் 20 இயந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து, வாக்குகள் சரிபாா்க்கப்பட்டு, பிறகு அவை அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT