திருநெல்வேலி

வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: விவசாயி கைது

DIN

வாசுதேவநல்லூா் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாக, விவசாயியைப் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம், நந்தவனத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கண்ணன்(21). அதே பகுதியைச் சோ்ந்தவா் கனகசபாபதி மகன் ஜெயக்குட்டி என்ற ஜெயகணேசன்(46). இருவரும் உறவினா்கள். ஜெயக்குட்டியின் மகளை கண்ணன் அடிக்கடி கேலி செய்துவந்தாராம்.

அதுதொடா்பாக, கடந்த சில தினங்களுக்கு முன் ஊா்ப் பெரியவா்கள் தலையிட்டு இருவருக்குமிடையே சமரசம் செய்துவைத்தனராம். இருப்பினும், கண்ணன் தொடா்ந்து கேலி செய்துவந்ததால் ஆத்திரமடைந்த ஜெயக்குட்டி, வியாழக்கிழமை இரவு அவரது வீட்டுக்குச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் இறந்தாா்.

தகவலறிந்து, வாசுதேவநல்லூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, ஜெயக்குட்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT