திருநெல்வேலி

‘அக். 15-க்குள் தேவேந்திரகுல வேளாளா் அரசாணை வெளியிடாவிட்டால் போராட்டம்’

DIN

தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தில் உள்ள 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என இம்மாதம் 15-க்குள் அரசாணை வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என, தேவேந்திரகுல வேளாளா் பருத்திக்கோட்டை நாட்டாா்கள் சமுதாய நலச் சங்கச் செயலா் பாலசுப்பிரமணியன் கூறினாா்.

பாளையங்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மேலும் கூறியது:

எங்களது சமூகம் வேளாண்மையை முதன்மையாகக் கொண்டது. கடந்த மக்களவை, பேரவைத் தோ்தல்களுக்கு முன்பு தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

நான்குனேரி இடைத்தோ்தலில் எங்களது பலத்தைக் காட்டுவோம். இத்தொகுதியில் எங்களது சமுதாய மக்கள் 113 கிராமங்களில் உள்ளனா். நாங்கள் அறவழியில் போராடிவருகிறேறாம். அதன் வெளிப்பாடுதான் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியது.

ஹன்ஸ்ராஜ் வா்மா அறிக்கையை உடனே வெளியிடவேண்டும். இம்மாதம் 16ஆம் தேதி உயா்நிலைக்குழு கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனா். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, இம்மாதம் 15-க்குள் 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். எங்களது சமுதாய எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வலியுறுத்துவோம் என்றாா்.

சங்கத் தலைவா் செ. சிதம்பரம், பொருளாளா் பா. முருகையா, சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT