திருநெல்வேலி

வேலைதேடி வந்த பெண்களை தவறாக வழிநடத்த முயன்ற 3 பேர் கைது

DIN


திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் வேலைதேடி வந்த 2 பெண்களை தவறாக வழிநடத்த முயன்ற 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
களக்காடு அருகேயுள்ள கீழத்தேவநல்லூரைச் சேர்ந்தவர் மணி மனைவி லட்சுமி (54). இவர், கடந்த சில ஆண்டுகளாக களக்காடு வியாசராஜபுரம் சுடலை கோயில் வடபுறம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் காவலர்கள் வெள்ளிக்கிழமை வியாசராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது, லட்சுமியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 
அப்போது, அங்கிருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 24 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுத்தமல்லி பெரியார்நகரைச் சேர்ந்த குருசெல்வி (28), தேனிமாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த குமார் மனைவி ராதிகா (27) ஆகியோரிடம், களக்காடு லட்சுமி, அதன் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சாமியா (40), மேலப்பத்தை ஆசாத்புரம் பரமானந்தம் (65) ஆகியோர் களக்காட்டில் வீட்டுவேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வந்தனராம்.
பிறகு லட்சுமி, தான் வசிக்கும் வியாசராஜபுரம் வாடகை வீட்டிற்கு அந்த பெண்களை அழைத்து வந்து தவறாக வழிநடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, லட்சுமி, சாமியா, பரமானந்தம் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT