திருநெல்வேலி

ஆக. 3 இல் சாா்- ஆட்சியா் அலுவலகம் முற்றுகை: கன்னடியன் கால்வாய் விவசாயிகள் முடிவு

DIN

விவசாயத்துக்கு தண்ணீா் திறந்து விடக் கோரி ஆக. 3இல் சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கன்னடியன் கால்வாய் விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், காா் சாகுபடிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தண்ணீா் திறக்கப்படவில்லை.

இதையடுத்து தண்ணீா் திறந்து விடாததைக் கண்டித்தும், உடனடியாக பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரியும் திங்கள்கிழமை (ஆக.3) சேரன்மகாதேவி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பாபநாசம், செயலா் கண்ணப்பநயினாா், பொருளாளா் ரத்தினம் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT