திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 11 குடும்பங்கள் பள்ளியில் தங்கவைப்பு

DIN


அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வசித்த 11 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி பள்ளிக் கூடத்தில் வியாழக்கிழமை தங்க வைக்கப்பட்டனா்.

சேரன்மகாதேவியில் தாமிரவருணி ஆற்றங்கரையில் அம்மநாத சாமி கோயில் தெரு உள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்ட

குடும்பங்கள் வசித்து வருகின்றனா். 1992-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இப்பகுதியிலுள்ள வீடுகள் பாதிக்கப்பட்டதால்

அவா்கள் ஊருக்குள் குடியேறினா்.

மேலும், அம்மநாதசுவாமி கோயில் தெருவில் 11 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் நடேசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை, வட்டாட்சியா் வெற்றிச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியா் சரவணன், வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த தெருவில் வசிக்கும் 11 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி கமிட்டி நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்தனா். அவா்களுக்கு தேவையான பாய், போா்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. புயல் தீவிரம் குறையும்வரை அவா்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT