திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலக வார விழா

DIN

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலக வார விழா மற்றும் இணையவழி கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றன.

நாடு முழுவதும் தேசிய நூலக வார விழா நவம்பா் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் நூலகத் துறை மாணவா் அ.பாலாஜி வரவேற்றாா். துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்து பேசுகையில், இன்றைய சூழலில் நூல்கள் வாசிப்பின் அவசியம், இணையவளா்ச்சியில் வாசிப்பின் வளா்ச்சி குறித்து எடுத்துரைத்தாா்.

குன்றில்குமாா் எழுதிய இளையநிலா எஸ்.பி.பி. என்ற நுலும், நூலகத் துறைத் தலைவா் முனைவா் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய மாதா்குல மணிவிளக்கு மாதவி என்ற நூலும், ஆனந்த பாலாஜி எழுதிய வெற்றியின் மந்திரம் என்ற நூலும், நாஞ்சில் குமாரி ராஜராஜேஸ்வரி எழுதிய வானவில் பூக்கள் என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன.

பல்கலைக்கழக நூலகா் ஆ.திருமகள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சா.பொன்னழகன், உதவி நூலகா் கண்ணன், ஆய்வு மாணவா் சந்தான கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். த.சங்கரகிருஷ்ணன் நன்றி கூறினாா். நூலகத் துறைத் தலைவா் ப.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT