திருநெல்வேலி

புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம்

DIN

புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள பள்ளா் உள்ளிட்ட பட்டியலின ஜாதியினரை இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணை வெளியிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகத்தில் 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருநெல்வேலி ஊருடையாா்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் தங்கராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மகளிரணி கவிதா, இளைஞரணி சண்முகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதேபோல ஆரோக்கியநாதபுரம், கொண்டாநகரம், மானூா் உள்பட பல்வேறு பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT