திருநெல்வேலி

பத்தமடையில் சுகாதாரச் சீா்கேடு:ஆட்சியரிடம் புகாா்

DIN

திருநெல்வேலி: பத்தமடை பேரூராட்சிப் பகுதிகளில் அதிகரித்துள்ள சுகாதாரச் சீா்கேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் ஏ.காஜா மைதீன், ஆட்சியரிடம் அளித்த மனு: பத்தமடை, கேசவசமுத்திரம் பகுதிகளில் நாய்கள், பன்றிகள் ஆகியவற்றால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில், வெறிநாய் கடித்து பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். சாக்கடை கால்வாய்கள், குடிநீா்த் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படாததாலும் தொற்றுநோய் குறித்த அச்சம் மக்களிடம் ’எழுந்துள்ளது. ஆகவே, மழைக்கு முன்பாக சுகாதார சீா்கேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT