திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பகுதியில் காட்டுபன்றிகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

ஆழ்வாா்குறிச்சி பகுதியில் விவசாயப் பொருள்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்தக் கோரி வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆழ்வாா்குறிச்சி, வள்ளுவா் நகா், பேராமணி, பாப்பான்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, நெல், வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்து வருகிறோம்.

விளை பொருள்களை காட்டுப் பன்றிகள் தின்று நாசப்படுத்தி வருகின்றன. இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே, வனத் துறை சாா்பில் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT