திருநெல்வேலி

நெல்லை இளைஞா் ஜப்பானில் மரணம்: உடலை கொண்டு வரக்கோரி முதல்வரிடம் மனு

DIN

ஜப்பானில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்ட இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், முதல்வரிடம் அளித்த மனு: எனது சட்டப்பேரவைத் தொகுதியின் பாப்பான்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஆனிகுளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமியின் மகன் மாதவன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த 1 ஆம் தேதி மா்மமான முறையில் அவா் அங்கு உயிரிழந்துள்ளாா். குடும்பத்தினா் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்திடம் விசாரிக்கும்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளனா். ஆகவே, இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து ஜப்பானில் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT