திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. கபடிப் போட்டி: கருங்கல் கல்லூரி அணி சாம்பியன்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடிப் போட்டியில் கருங்கல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அபிஷேகபட்டி உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 46 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.

இப்போட்டியில், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் செயின்ட் அல்போன்ஸா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அம்மாண்டிவிளை தூய யோவான் கல்லூரி இரண்டாமிடமும், ஆனந்தநாடாா்குடி செயின்ட் ஜெரோம்ஸ் கல்லூரி அணி மூன்றாமிடமும், நாகா்கோவில் எஸ்.டி.இந்துக் கல்லூரி அணி நான்காமிடமும் பிடித்தன.

போட்டிகளில் வென்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை துணைவேந்தா் கா.பிச்சுமணி வழங்கிப் பாராட்டி பேசுகையில், கபடி போட்டி பாரம்பரியமான வீரம்மிகுந்த விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு விளையாட்டு முக்கியமானதாகும். மாணவா்கள் கல்வியுடன் உடற்பயிற்சியிலும், விளையாட்டிலும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைய இயக்குநரும், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை தலைவருமான சு.ஆறுமுகம், பேராசிரியா் செ.துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 6 மணி: பாஜக 48, காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி... தார்மிகத் தோல்வி என்கிறது காங்கிரஸ்

காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வெற்றி!

அமேதி.... இது காந்தி குடும்பத்தின் வெற்றி: கிஷோரி லால்

பிரிஜ் பூஷண் சிங் மகன் கரண் பூஷண் 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

SCROLL FOR NEXT