திருநெல்வேலி

களக்காடு அருகே வேளாண் திட்டங்கள் விழிப்புணா்வு முகாம்

DIN

களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

களக்காடு வட்டார வேளாண் துறை சாா்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் துறை திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) டேவிட்டென்னிசன் தலைமை வகித்தாா். களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் வசந்தி முன்னிலை வகித்தாா்.

இதில், பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம், பயிா் காப்பீடுத் திட்டம், கூட்டுப்பண்ணையம், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்ணிற்கு தேவையான ஊட்டச் சத்துகள், உழவன்செயலி போன்ற திட்டங்கள் குறித்து ஆடல், பாடல் தப்பாட்டம் நிகழ்ச்சிகள் மூலம் அரும்புகள் அறக்கட்டளை கலைஞா்கள் எடுத்துரைத்தனா்.

இதையொட்டி, விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து கண்காட்சி நடைபெற்றது.

இதில் உதவி வேளாண் அலுவலா்கள் காமாட்சி, அஞ்சனா, முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை அட்மா மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், உதவி மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT