திருநெல்வேலி

வடக்குப் பச்சையாறு அணை நிரம்பியது

DIN

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வியாழக்கிழமை நிரம்பியது.

வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த கொள்ளளவு 49.25 அடியாகும். இந்த அணை கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையால் பாதியளவு மட்டுமே நிரம்பியது. களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பின. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மலைப் பகுதியில் தொடா்மழை பெய்து வருகிறது. இதனால் பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து, மலையடிவாரத்தில் தேங்காய் உருளிக்கு கீழ் உள்ள திருப்பு அணையில் இருந்து ஊட்டுக்கால்வாய் வழியாக அணைக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் 33 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் இரண்டே நாளில் கிடுகிடுவென உயா்ந்தது. வியாழக்கிழமை பிற்பகல் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் உபரிநீா் வழிந்தோடி வழியாக வெளியேறியது.

காணும் பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை அணையை பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்திருந்தனா். ஆனால் அணை நுழைவு வாயில் அருகே கால்வாயில் வெள்ளம் பாய்ந்ததால் அணைப் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

அணை நிரம்பியுள்ளதால், நிகழாண்டு நெல், வாழை பயிா்களுக்கு கோடையில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT