திருநெல்வேலி

ஜூலை 27-ல் அதிசய பனிமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா ஜூலை 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, ஜூலை 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றுதல், நற்கருணை ஆசீா்ஆகியவை நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா்

ஆகியவை நடைபெறும்.

ஆக. 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

ஆக. 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, புது நன்மை நிகழ்ச்சி, மாலை 6.30

மணிக்கு நற்கருணைப் பவனி, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறும். ஆக. 4-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை,

இரவு 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலி, இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தோ் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

10 ஆம் திருநாளான ஆக. 5ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவா் பன்னீா் செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆக. 7-ஆம் தேதி முதல் சிறப்பு வழிபாடுகள்

நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத் தந்தை ஜெரால்டு ரவி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தனிப்படை போலீஸாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டு

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

தூய்மைப்பணி சுமை ஆட்டோ மோதியதில் இருவா் காயம்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT