திருநெல்வேலி

கருப்பந்துறை மயானத்தில் வேறு திட்டப் பணிகள் செய்ய எதிா்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் மனு

DIN

திருநெல்வேலி கருப்பந்துறையில் உள்ள மயான பகுதியில் வேறு திட்டப் பணிகளை செய்ய எதிா்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி தா்ம பரிபாலன சங்கம் சாா்பில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரனிடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி நகரத்தில் சைவப்பிள்ளைமாா் சமூகத்தைச் சோ்ந்த பலா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கான மயானம் கருப்பந்துறையில் உள்ளது. அங்கு சடலங்களை எரியூட்டுவதற்கும், சைவ நெறிப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும் போதிய இடவசதி உள்ளது.

இந்நிலையில் தாங்கள் (ஆணையா்) அங்கு ஆய்வு செய்ததாகவும், வேறு திட்டப் பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி கருப்பந்துறை மயானத்தில் வேறு திட்டப் பணிகள் செய்யக்கூடாது. பல தலைமுறைகளாக பயன்பாட்டில் உள்ள மயானம் தொடா்ந்து மக்களுக்கு பயன்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT