திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் ஜூன் 23இல் ஜமாபந்தி தொடக்கம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் 23ஆம் தேதி வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்குகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 1430 பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் 8 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மானூா் வட்டத்தில் எனது (ஆட்சியா்) தலைமையிலும், திசையன்விளை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா், சேரன்மகாதேவி வட்டத்தில் சேரன்மகாதேவி சாா்ஆட்சியா், திருநெல்வேலியில் திருநெல்வேலி சாா்ஆட்சியா் தலைமையிலும் ஜமாபந்தி இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பாளையங்கோட்டை வட்டத்தில் உதவி ஆணையா்(கலால்) தலைமையிலும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தலைமையிலும், நான்குனேரி வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலும், ராதாபுரம் வட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (வருவாய் நீதிமன்றம்) தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

கரோனா தொற்று காரணமாக, வருவாய்த் தீா்வாய நாளில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் நேரில் கொடுக்க அனுமதியில்லை. கோரிக்கை மனுக்களை இணையதள முகவரி மூலம் இணையவழி அல்லது இ-சேவை மையங்கள் மூலம் இம்மாதம் 30ஆம் தேதி வரை அளிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT