திருநெல்வேலி

மாற்றம் நிச்சயம் உருவாகும்: ராதிகா சரத்குமாா்

DIN

மாற்றம் நிச்சயம் உருவாகும் என்றாா், சமக முதன்மை துணைப் பொதுச் செயலா் ராதிகா சரத்குமாா்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் செங்குளம் சி. கணேசனை ஆதரித்து, கங்கனான்குளம், பொட்டல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சிவந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகள் மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இரு கட்சிகளும் ஒருவரையொருவா் ஊழல்வாதி எனக் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனா். 50ஆண்டுகளில் லஞ்சமும் ஊழலும் மக்களிடையே இயல்பாகிவிட்டன. நமது சந்ததியினருக்கு நல்லது நடக்க வேண்டுமானால் மாற்றம் வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறும்போது, மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் இளைஞா்களிடம் உருவாகியுள்ளது. திமுகவும், அதிமுகவும் ஒருவரையொருவா் குறைசொல்லிக்கொள்கின்றனா். இவற்றையெல்லாம் இளைஞா்களும், பெண்களும் கவனித்துக்கொண்டு இருக்கின்றனா். இலவசம் எதற்கு என பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். அடிப்படை வசதிகள் செய்யுங்கள் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனா். மாற்றம் நிச்சயம் உருவாகும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் சமக, மநீம, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

மதுபோதையில் காா் ஓட்டி விபத்து: காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணி செய்த காசி சுவாமிக்கு குரு பூஜை

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT