திருநெல்வேலி

கங்கைகொண்டானில் சரக்குப் போக்குவரத்து தொடக்கம்

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கை கொண்டான் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சரக்கு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரக்குப் போக்குவரத்து தொடங்கியது.

திருநெல்வேலி ரயில் நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு ரயில்வே சரக்கு நிலையம் திறக்கப்பட்டது. இங்கு செவ்வாய்க்கிழமை முதன் முதலாக சரக்குப் போக்குவரத்து கையாளப்பட்டது.

கங்கைகொண்டான் பகுதியில் உள்ள கோவில்பட்டி லட்சுமி மாவு ஆலைக்கு, வடகிழக்கு ரயில்வே லக்னௌ கோட்டம் கோண்டா கச்சாஹ்ரி ரயில் நிலையத்திலிருந்து வந்த 1,300 மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகள் முதன்முதலாக கையாளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT