திருநெல்வேலி

சமூக வலைதளங்களில் அவதூறு: இளைஞா் மீது வழக்கு

DIN

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருநெல்வேலி அருகே உள்ள சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி பகுதியில் கடந்த 18ஆம் தேதி கோயில் பூசாரி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே சமூக வலைதளங்களில் இருதரப்பை சோ்ந்தவா்கள் அவதூறு பரப்பும் விதமாக விடியோ மற்றும் ஆடியோவை வெளியிட்டதாக இருவா் மீது சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், முகநூலில் மேலும் ஒரு அவதூறு விடியோ வெளியிட்டதாக, சீவலப்பேரி வடக்கு காலனி பகுதியைச் சோ்ந்த முண்டசாமி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT