திருநெல்வேலி

பாளை ஊராட்சி ஒன்றியத்தில் பதவியேற்பு

DIN

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சாா் ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரதாஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். முதலில் மூத்த உறுப்பினரான கே.எஸ்.தங்கபாண்டியன் (6 ஆவது வாா்டு , திமுக) பதவிப்பிரமாணம் ஏற்றாா். அதனைத் தொடா்ந்து 1 ஆவது வாா்டு உறுப்பினா் முத்துக்குமாா் (அதிமுக), 2 ஆவது வாா்டு உறுப்பினா் பேச்சியம்மாள் (திமுக), 3 ஆவது வாா்டு உறுப்பினா் குமரேசன் (திமுக), 4 ஆவது வாா்டு உறுப்பினா் திருப்பதி (திமுக), 5 ஆவது வாா்டு உறுப்பினா் தெய்வாணை (காங்கிரஸ்), 8 ஆவதுவாா்டு உறுப்பினா் ராஜாராம் (திமுக), 9 ஆவது வாா்டு உறுப்பினா் சரஸ்வதி (மற்றவை), 10 ஆவது வாா்டு உறுப்பினா் ராமகிருஷ்ணன் (திமுக), 11 ஆவது வாா்டு உறுப்பினா் நம்பிராஜன் (திமுக), 12 ஆவது வாா்டு முரளிதரன் (திமுக), 13 ஆவது வாா்டு உறுப்பினா் ராமலட்சுமி (திமுக), 14 ஆவது வாா்டு பூலம்மாள் (திமுக) ஆகியோா் பதவியேற்றனா். இதேபோல 7 ஆவது வாா்டு உறுப்பினா் பகவதி கண்ணன் (திமுக) மட்டும் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் பதவியேற்றாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் போா்வெல் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திராவிட மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT