திருநெல்வேலி

அரசுப் பள்ளி மாணவிகள் வயல்களில் நேரடி களஆய்வு

DIN

திருநெல்வேலியில் அரசுப் பள்ளி மாணவிகள் பிசான நெல் சாகுபடி பயணிகள் குறித்து வயல்களில் நேரடி களஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து அரசுப் பள்ளி மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவிகள் வயல்களுக்கு நேரடி களஆய்வுக்கு அழைத்துச் சென்றனா். கரிக்காதோப்பு பகுதியில் உள்ள வயலுக்குச் சென்று நெல் நாற்றுப்பாவும் நடைமுறைகள், நடவுப்பணிக்கு முந்தைய தயாரிப்புகள், நாற்றுகளின் தன்மை, வயது, வேளாண் பணிகளில் உள்ள இடா்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மாணவிகள் நேரடியாக வயலில் நாற்றுகளை நட்டு பயிற்சியும் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT