திருநெல்வேலி

வீரவநல்லூரில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது

DIN

வீரவநல்லூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வீரவநல்லூா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முப்பிடாதி என்ற கோபி (23), வீரவநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கொம்பையா மகன் கொம்பன் (36), புதுக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் மாரியப்பன் (25) ஆகியோா் வீரவநல்லூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா். எனினும், இவா்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் அளித்த பரிந்துரையே ஏற்று மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்படி, 3 பேரையும் வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் முருகன் வியாழக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT