திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 2 கடைகளுக்கு சீல்: ரூ.20 ஆயிரம் அபராதம்

DIN

களக்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா். மேலும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு அருகேயுள்ள புலவன்குடியிருப்பு தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (84). இவா் இடையன்குளம் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின்பேரில் களக்காடு காவல் ஆய்வாளா் ஜோசப்ஜெட்சன், உணவு பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன் ஆகியோா் கடையை சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல பத்மனேரியைச் சோ்ந்த செல்லப்பாண்டியன் (85) என்பவா் வடமலைசமுத்திரத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT