திருநெல்வேலி

பச்சையாற்றில் அதிக நீா்வரத்து:தலையணையில் குளிக்கத் தடை

DIN

களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து, பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 2 நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதனால், தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் பாய்ந்தோடுகிறது.

நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடைவிதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனா். நீா்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT