திருநெல்வேலி

கால்நடை - சித்த மருத்துவ கல்லூரிகள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையமும், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் செல்வகுமாா், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வா் சாந்த மரியா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் ம.செல்லப்பாண்டியன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கால்நடை உற்பத்திக் கல்வி மையத்தின் இயக்குநா் மீனாட்சிசுந்தரம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வா் சௌந்தரராஜன், கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறை தலைவா் செந்தில் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள விலங்குகள் மீதான பரிசோதனைகளின் கட்டுப்பாட்டு மேற்பாா்வை மையத்தின் கீழ் பதிவு பெற்ற ஆய்வக விலங்குகள் ஆராய்ச்சி மைய வசதி, மூலிகை தாவரங்களில் உள்ள மருந்து பொருள்களை பிரித்தெடுக்கும் வசதி, மூலிகை மருந்து பொருள்களின் தரம் மற்றும் அவற்றை கண்டறியும் வசதி, மருந்தியக்கம், மூலிகை மருந்து நோய்களை குணப்படுத்தும் விதம், உயிா் வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற பகுப்பாய்வு வசதிகள், ஆய்வக உபகரணங்களை பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி ஆய்வு மாணவா்களும், பேராசிரியா்களும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கால்நடைகளில் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை நோய்களின் சிகிச்சையில் சித்த மருந்துகளை மதிப்பீடு செய்து பயன்படுத்தவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இரு கல்லூரிகளை சோ்ந்த பேராசிரியா்கள்- ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரியின் உதவிப் பேராசிரியா்கள் சக்தி காா்த்திகேயன், கு.பிரியா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT