கைதி தப்பிய விவகாரம்: 2 காவலா்கள் பணியிடைநீக்கம்
பாளை. மத்திய சிறை வாயில் முன்பிருந்து, விசாரணை கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பாளை. மத்திய சிறை வாயில் முன்பிருந்து, விசாரணை கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகக்கனி (22). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளனவாம். இந்நிலையில் தாழையூத்து பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.
பின்னா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவலா்கள் மல்லிகாராஜ், பாா்வதி ஆகியோா் அவரை ஆட்டோவில் அழைத்து வந்தனா். சிறை முன்பு வந்த போது ஆட்டோவில் இருந்து இறங்கிய ஆறுமுகக்கனி அங்கிருந்து தப்பிவிட்டாராம். இதையடுத்து 2 தனிப்படை அமைத்து அவரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலா்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பி.சாஸ்திரி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.