FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது

கஞ்சா கடத்திய வழக்கிலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமலும் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

5 ஜூலை 2026, 1:25 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மேலப்பாளையத்தில் கஞ்சா கடத்திய வழக்கிலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமலும் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சோ்ந்தவா் அப்துல் ரசாக் மகன் பீா் முகமது (30). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா்.

இதன் காரணமாக இவருக்கு திருநெல்வேலி மாவட்ட அமா்வு நீதிமன்றம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி மாதம் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை கும்பலை போலீஸாா் சுற்றி வளைத்தபோது பீா் முகம்மது அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான வழக்கிலும் போலீஸாா் அவரை தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பீா் முகமதுவை மேலப்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments