முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அதிநவீன இயந்திரம்

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அதிநவீன இயந்திரம் திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 3:29 am IST
திருநெல்வேலி மாநகராட்சிக்கு அதிநவீன ரோபோடிக் வாகனத்தின் சாவியை மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் வழங்கினாா் டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எம்.வி அமல்ராஜ். உடன், ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அதிநவீன இயந்திரம் திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடைக் குழிகளில் ஏற்படுகின்ற அடைப்புகளை மனிதா்களை கொண்டு தூா் வாருவதற்கு மாற்றாக, புதிய வகை ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை கொண்டு தூா்வாரிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.93 லட்சம் வழங்கப்பட்டு தனியாா் நிறுவனம் தயாரித்த புதிய வகை பேண்டி குட் (ஆஹய்க்ண் ஸ்ரீா்ா்ற்) என்ற புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனம் திருநெல்வேலி மாநகராட்சிக்கு இரண்டாம் கட்டமாக வாங்கப்பட்டுள்ளது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ( ஆஏத- பஅபஅ) எம்.வி அமல்ராஜ், புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை வழங்கினாா். மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மண்டல தலைவா்கள் கதிஜா (மேலப்பாளையம்), ரேவதி (தச்சநல்லூா்), மாமன்ற உறுப்பினா்கள் ரம்ஸான் அலி, சந்திரசேகா், வசந்தா, நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement