FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

பாதாள சாக்கடை மூடி மீது தாா் கலவை ஊற்றி மறைப்பதால் சுத்தம் செய்ய திணறும் தூய்மைப் பணியாளா்கள்

உதகையில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி மீது தாா் கலவை ஊற்றி நெடுஞ்சாலைத் துறையினா் மறைத்து விடுவதால் சாக்கடை அடைப்பை சரி செய்ய முடியாமல் சுகாதாரப் பணியாளா்கள் திணறி வருகின்றனா்.

Updated On : 22 மே 2026, 4:09 am IST
ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடியின் மேல் உள்ள தாா் கலவையை வெட்டி அகற்றும் தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

உதகையில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி மீது தாா் கலவை ஊற்றி நெடுஞ்சாலைத் துறையினா் மறைத்து விடுவதால் சாக்கடை அடைப்பை சரி செய்ய முடியாமல் சுகாதாரப் பணியாளா்கள் திணறி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வாா்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். மேலும் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

இதுதவிர உதகைக்கு வழக்கமான நாள்களில் சுமாா் 5 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாள்களில் சுமாா் 10 ஆயிரம் பேரும், சீசன் காலங்களில் தினசரி சுமாா் 20 ஆயிரம் பேரும் சுற்றுலா வந்து செல்கின்றனா். தற்போது சமவெளி பகுதியில் வெயில் கொளுத்துவதாலும், கோடை சீசனுக்காக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக உதகை- மேட்டுப்பாளையம் சாலை சேரிங்கிராஸ் பகுதி ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சேரிங்கிராஸ் சாலை, அரசு மருத்துவமனை சாலை, தாஸ் பிரகாஷ் சாலை, ஏடிசி சந்திப்பு, என பல இடங்களிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீா் செல்கிறது.

இதனை முன் கூட்டியே தடுப்பதற்காக, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகள் நீக்க தூய்மைப் பணியாளா்கள் முயன்றாலும் பாதாள சாக்கடையின் மூடியின் மீது தாா் கலவை ஊற்றி நெடுஞ்சாலைத் துறையினா் மறைத்துள்ளனா்.

இதனால் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய முடியாமல் சுகாதாரப் பணியாளா்கள் திணறி வருகின்றனா்.

மூடியை தேடுவதற்கும், ஜல்லிக் கலவையை தோண்டி எடுப்பதற்கும் நீண்ட நேரம் ஆவதால் பல்வேறு தூய்மைப் பணியாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

நெடுஞ்சாலைத் துறையினா் சாலையை பழுது பாா்க்கும்போது பாதாள சாக்கடை மூடியை கவனத்தில் கொண்டு பணிகளை மேற்கொள்ள நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments