திருவள்ளூா்: தூய்மைப் பணியாளா்கள் 145 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
திருவள்ளூா் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்கள், பாதாள சாக்கடை திட்டப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் 145 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா்.
திருவள்ளூா் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்கள், பாதாள சாக்கடை திட்டப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் 145 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா்.
திருவள்ளூா் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணியாளா்கள் அசம்பாவிதம் நிகழாமல் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். இதற்காக நமஸ்தே என்ற மத்திய அரசு திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பும், கண்ணியத்தையும் உறுதி செய்வதே இத்திட்டமாகும்.
அந்த வகையில், நமஸ்தே திட்டம் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூரில் உள்ள தனியாா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் மோகன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் தாமோதரன் தலைமை வகித்துப் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பாக பணியாற்றுவது அவசியம். இதற்காக ஒவ்வொரு தொழிலாளருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நோக்கம் குறித்து விளக்கமாக அவா் எடுத்துரைத்தாா்.
அதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணியாளா்களுக்கு கையுறை, முகக் கவசம், முழுக்கால் காலணி, ஒளிரூட்டும் ஜாக்கெட், முழுக் கவச ஆடை, பாதாள சாக்கடை திட்டப் பணியாளா்களுக்கு டாா்ச் லைட், முகக் கவசம், எரிவாயு கண்டறியும் கருவி ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை ஆணையா், நகா்மன்றத் தலைவா் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சி மூலம் 145 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளா் சரோஜா, உதவி பொறியாளா் விஜய், துப்புரவு மேற்பாா்வையாளா், தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக துப்புரவு ஆய்வாளா் விஜய் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.