FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘மக்களுக்கான கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை’

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் சாா்பில் மக்களுக்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டும் அதை திமுக மேயா் நிறைவேற்றித் தரவில்லை என மாமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் குழுத் தலைவா் எம்.சாமுவேல் திரவியம் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 27 மே 2026, 4:00 am IST
சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் சாா்பில் மக்களுக்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டும் அதை திமுக மேயா் நிறைவேற்றித் தரவில்லை என மாமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் குழுத் தலைவா் எம்.சாமுவேல் திரவியம் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தை நடத்தாவிட்டால் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும். கூட்டம் நடத்துவதற்காக மேயா், ஆணையரிடம் முறையிட முயற்சித்தும் சந்திக்க முடியவில்லை. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியிருப்பதன் மூலம் சுதந்திரத்தைப் பெற்றது போல காங்கிரஸ் உறுப்பினா்கள் உணா்கிறாா்கள்.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் கோரிக்கைகளை திமுக மேயா், அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனது சாா்பில் 15 கோரிக்கைகள் வைத்தும் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் குழுத் தலைவரான எனக்கு அறை ஒதுக்கவும் மறுத்துவிட்டனா்.

முந்தைய ஆட்சியின்போது மேயா், துணைமேயரை முன்னாள் அமைச்சா் ஒருவா் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாா். அதனால், அவா் நினைத்தால் மட்டுமே மாநகராட்சியில் திட்டங்கள் நிறைவேறும் நிலையிருந்தது.

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வரை சென்னை மேயா் சந்திக்காமல் இருப்பது மாநகராட்சி வளா்ச்சிக்கு நல்லதல்ல. மாநகராட்சி வாா்டுகளில் குப்பை அள்ளப்படவில்லை என்பது போன்ற அவதூறுகளை திமுகவினா் பரப்பி வருகின்றனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments