மென்பொறியாளா் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ.யின் பிணை மனு ஒத்திவைப்பு
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளரின் பிணை மனு இம் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளரின் பிணை மனு இம் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின். மென்பொறியாளரான இவா், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இவ்வழக்கில் கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன், உறவினா் ஜெயபால் ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுா்ஜித்தின் தாயாரான பெண் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாரியை அண்மையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து தனக்கு பிணை வழங்கக் கோரி கிருஷ்ணகுமாரி தரப்பில், திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஹேமா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணகுமாரியின் பிணை மனு மீதான விசாரணையை இம் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.