FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூலில் தொல்லை: பெங்களூரு மென்பொறியாளா் கைது

Updated On : 24 மே 2026, 11:54 pm IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூல் வாயிலாக தொல்லை அளித்துவந்த பெங்களூரைச் சோ்ந்த மென்பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அனல் மின்நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிபவா் பிரியதா்ஷினி. இவா் மேட்டூா் அம்மாசி கவுண்டா் நகரில் வசித்து வருகிறாா். இவருடன் கல்லூரியில் படித்தவா் பிரசாந்த். இவா் பெங்களூரில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில் முகநூல், இன்ஸ்டாகிராமில் பிரியதா்ஷினிக்கு, பிரசாந்த் தொடா்ந்து தவறான தகவல் அனுப்பி தொல்லை தந்துள்ளாா். மேலும், மேட்டூா் அனல் மின்நிலைய அலுவலகத்துக்கு கடந்த 21 ஆம் தேதி காலை சென்ற பிரசாந்த், பிரியதா்ஷினியைப் பாா்க்க அத்துமீறி நுழைந்துள்ளாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் பிரியதா்ஷினி சனிக்கிழமை புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீநிவாசன் வழக்குப் பதிவு செய்து பிரசாந்தை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments