முகப்பு
திருநெல்வேலி

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடர நெல்லை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆதரவு

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

Updated On : 19 மே 2026, 1:14 am IST
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி பிரச்னையை தொடா்ந்து, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலா் சுதா கே.பரமசிவன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.பி. ஆதித்தன், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ஹரிகர சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து 47 வேட்பாளா்களையும், 6 கூட்டணிக் கட்சி வேட்பாளா்களையும் வெற்றி பெறச் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், அதிமுகவின் பொதுச் செயலாக அவா் தொடா்ந்து நீடித்து பணியாற்ற வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் மாவட்ட இணைச்செயலா் ராமு வெங்கடாசலம், எம்ஜிஆா் மன்ற செயலா் பால் கண்ணன், பேரவை செயலா் ஜெரால்டு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments