ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக சார்பில் நாசரேத்தில் 20-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலர் நாசரேத் துரை தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் குருமத்தேயு, நாசரேத் நகர அவைத் தலைவர் ஜெயபாலன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய இளைஞரணிச் செயலர் பாபுசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் ரஞ்சன் வரவேற்றார். இதில் மாநிலப் பேச்சாளர் விடுதலைவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் கருப்பசாமிபாண்டியன், மாநில மீனவரணி துணைச்செயலர் நக்கீரன்,மாநில இலக்கிய அணி துணைச் செயலர் தராசுமகாராஜன், சாத்தான்குளம் நகரச் செயலர் ச.மகாராஜன், பாண்டியன் ஆகியோர் பேசினர்.
திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் வித்யாசுரேஷ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் ராஜகோபால், மாவட்டப் பிரதிநிதி மோகன்ராஜ், ஞானியார்குடியிருப்பு கிளைச் செயலர் சுடலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாசரேத் நகரச் செயலர் ராபர்ட் நன்றி கூறினார்.
Advertisement
Advertisement