தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு மருத்துவர்கள் தர்னா

DIN

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மத்திய அரசின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தேசிய எக்சிட் தேர்வு முறையை நிராகரிக்க வேண்டும், தேசிய மருத்துவக் குழுவை உருவாக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. குமரன் தலைமை வகித்தார். செயலர் மோசஸ், பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் அரசு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT