தூத்துக்குடி

ஆழ்வார்திருநகரியில் மறியல் போராட்டம்

DIN

பீட்டா அமைப்பை தடை செய்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, ஆழ்வார்திருநகரியில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வியாபாரிகள் சங்கத்தினர் காலை முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கிராம சாவடி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய லீக் மாநில துணைப் பொதுச் செயலர் முகமது நவாஸ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலர் சுடலை முன்னிலை வகித்தார். இந்திய தேசிய லீக் மாவட்டச் செயலர் சலீம் பாதுஷா, சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர் பாதுஷா, இந்திய தவ்ஹீத் ஜஅமாத் மாவட்ட துணைச் செயலர் பாசில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT