தூத்துக்குடி

கள்ளச்சாராயம் ஒழிப்பு  விழிப்புணர்வுப் பேரணி

DIN

கோவில்பட்டியில் கோட்ட கலால் அலுவலகம் சார்பில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு கோட்ட கலால் அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முனியசாமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலால் உதவி ஆணையர் விஜயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணி, எட்டயபுரம் சாலை அரசு அலுவலக வளாகம் வழியாக கோட்ட கலால் அலுவலகம் முன் நிறைவடைந்தது. பேரணியில், வருவாய் ஆய்வாளர் அப்பனராஜ், கோட்ட கலால் ஆய்வாளர் முகம்மதுநாசர், ஆசிரியர் முனிஅந்தோணிராஜ் மற்றும் பள்ளி மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

SCROLL FOR NEXT