தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் 3 பள்ளிகள் 100% தேர்ச்சி

DIN

காயல்பட்டினத்தில் சுபைதா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சுபைதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 122 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். சமூக அறிவியலில் 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றனர். சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 23 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். சமூக அறிவியலில் 3 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.
எல்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 53 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். கணித்தில் 2 பேர், அறிவியலில் 4 பேர், சமூக அறிவியலில் 18 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.
சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 78 மாணவர்களில் 67 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 86 சதவீத தேர்ச்சியாகும். எல்.கே. மேல்நிலைப் பள்ளியில் 157 மாணவர்கள் தேர்வெழுதியதில் 153 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.5 சதவீத தேர்ச்சியாகும்.
முஹ்யித்தீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 27 பேர் தேர்வெழுதியதில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96 சதவீத தேர்ச்சியாகும். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 137 பேர் தேர்வெழுதியதில் 135 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.5 சதவீத தேர்ச்சியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT