தூத்துக்குடி

தனியார் பேருந்து மீது கல் வீச்சு

DIN

கயத்தாறு அருகே தனியார் பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்தி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர் உள்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி வி.கே.புதூர் ருக்மணியம்மாள்புரம் பசும்பொன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியபாண்டியன் மகன் காசிராஜா(43). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர் ஓட்டி வந்த பேருந்து, ஞாயிற்றுக்கிழமை கயத்தாறிலிருந்து செட்டிக்குறிச்சி வழியாக கோவில்பட்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்ததாம்.   பேருந்து, இரவு கயத்தாறையடுத்த தெற்கு கோணார்கோட்டை - புதூர் ஓடுபாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே  வந்த கார்,  பேருந்து மீது மோதும் நிலை ஏற்பட்டதாம். அதையடுத்து, காசிராஜா பேருந்தை ஓரமாக நிறுத்தி கார் ஓட்டுநரை காரை சரியாக ஓட்டுமாறு கூறினாராம்.
அதையடுத்து, காரில் இருந்து இறங்கிய கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் பேருந்து ஓட்டுநர் காசிராஜாவை தாக்கி, மிரட்டல் விடுத்தனராம்.  பின்னர், பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஒருபக்க கண்ணாடியை பீர்-பாட்டில் மற்றும் கல்லால் எறிந்து சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT