முகப்பு
தூத்துக்குடி

கீழக்கருங்கடல் ஸ்ரீஉலகம்மன் கோயிலிலில் மகா கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்கருங்கடல் ஸ்ரீஉலகம்மன் கோயிலிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:37 am IST
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்கருங்கடல் ஸ்ரீஉலகம்மன் கோயிலிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  
இக்கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை  தொடங்கி புதன்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது. தொடக்க நாளான திங்கள்கிழமை காலை 5 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,  புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், கஜ பூஜை,  கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், காலை 10.30 மணி முதல் நவக்கிரஹ ஹோமம்,  சுதர்சன ஹோமம்,  தன பூஜை,  மஹாலெஷ்மி ஹோமம்,  முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. 
2ஆவது நாளான செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, துவார பூஜை, வேதிகார்ச்சனை ஹோமம், மூன்றாம் கால யாக பூஜை, வேத பாராயணம் உள்ளிட்டவை நடைபெற்றன.
3ஆவது நாளான புதன்கிழமை காலை 6 மணி முதல் நான்காம் கால யாக பூஜை,  துவார பூஜை, நாடி சந்தானம்,  தசதரிசனம், வசுதாரஹோமம்,  மகா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, விமான அபிஷேகம்,  ஸ்ரீ உலகம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
காலை 10 மணி முதல் மகாஅபிஷேகம்,  விஷேடதிரவிய அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.
விழாவில் திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இரவு 7 மணி முதல் விசேஷ அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலிலி, அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments